அப்போலோ மருத்துவமனை, நம் நாட்டில் உள்ளஇளைஞர்களுக்கு குடல் நோய் அழற்சி அதிகரிப்பது குறித்துஎச்சரிக்கிறது!

சென்னைஜனவரி 20, 2023: ஆசியாவின்முதன்மையான நம்பகமான ஒருங்கிணைந்த சுகாதாரசேவைகள் குழுமமான அப்போலோ மருத்துவமனைமற்றும் தமிழ்நாடு இரைப்பைக் குடலியல்(காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட்) அறக்கட்டளை [Tamil Nadu Gastroenterologist Trust] ஆகியவை இணைந்து, அதிகரித்து வரும் இரைப்பை மற்றும் குடல் அழற்சிநோய் குறித்து மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும்சுகாதார நிபுணர்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்கஒரு மாநாட்டை நடத்துகின்றன. ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2023 அன்று நடைபெறும் ஒரு நாள் மாநாட்டில், அழ்ந்த நிபுணத்துவம் பெற்ற 300-க்கும் மேற்பட்டபிரதிநிதிகள், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்டஉலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துபங்கேற்கின்றனர்.

நோயின் தன்மை மற்றும் பாதிப்பு குறித்த மதிப்பீடு, சிகிச்சை, சிக்கலான சூழல்களைச் சமாளித்தல், கடுமையான சீழ் புண்ணை உண்டாக்கும் (அல்சரேட்டிவ்)பெருங்குடல் அழற்சி மேலாண்மை, குடல் அழற்சிசிகிச்சை மற்றும் மேலாண்மையில் அண்மைக்காலமுன்னேற்றங்கள் ஆகியவை குறித்து இந்த மாநாட்டின்போது நிபுணர்களால் எடுத்துரைக்கப்படும். இந்தஉயர்நிலைக் கற்றல் அனுபவம், எதிர்காலத்தில்மேம்பட்ட சிகிச்சை அளித்து, நோயாளிகளுக்கு சிறந்தஅனுபவங்களை ஏற்படுத்த வழிவகுத்து, சிறந்த பலன்கொடுக்கும் என்று அப்போலோ மருத்துவமனைநம்புகிறது.

குடல் அழற்சி நோய் (IBD – Inflammatory Bowel Disease) என்பது குடல் அழற்சி மற்றும் குடல் புண்களால்வரும் ஒரு நிலை ஆகும். இது இளைஞர்கள் மற்றும்முதியவர்கள் என இருவரையும் பாதிக்கிறது. ஐபிடிஎனப்படும் குடல் அழற்சி நோய் ஒரு நீண்ட கால நோய்ஆகும். இந்த நிலையில் பாதிக்கப்பட்டநோயாளிகளுக்கு வழக்கமான சோதனைகள், சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் சிகிச்சை பலன்களைக்கண்காணித்தல் உள்ளிட்ட நீண்ட கால மருத்துவப்பராமரிப்பு தேவைப்படுகிறது.

அப்போலோ மருத்துவமனையால் நடத்தப்பட்டஅண்மைக்கால ஆய்வில், குடல் அழற்சி நோய் (IBD) உடையவர்களில் பெரும்பாலானவர்கள் படித்த இளம்பட்டதாரிகள் என்று தெரியவந்துள்ளது. குடல் அழற்சிநோயறிதல் மற்றும் சிகிச்சையில் உள்ள சில சிக்கலானஅம்சங்கள் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளைத்தீர்க்க, தேசிய மற்றும் சர்வதேச அளவிலானநிபுணர்களை, இந்த தளத்தின் மூலம் ஒரே மேடையில்ஒன்றிணைப்பதை அப்போலோ மருத்துவமனைநோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *