மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் (10.03.2024) சைதாப்பேட்டை, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 162 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1,48,19,540/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட கால்கள் பாதிக்கப்பட்ட 140 பயனாளிகளுக்கு ரூ.1,34,41,540/- மதிப்பில் (ஒன்றின் விலை ரூ.96,011/-) இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்கள், முதுகுத்தண்டுவடம் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 14 பயனாளிகளுக்கு ரூ.13,78,000/- (ஒன்றின் விலை ரூ.1,06,000/-) மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான 4 வகை திருமண நிதி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 12 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் என மொத்தம் 162 பயனாளிகளுக்கு ரூ.1,48,19,540/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் இன்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி அனுசயா தேவி அவர்கள், கோடம்பாக்கம் மண்டலக் குழுத் தலைவர் திரு. எம். கிருஷ்ணமூர்த்தி அவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் திரு. சீ. குமார், திரு. கதிர்வேலு, மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.