ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

     வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அmவர்கள் தலைமையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் குறித்து தொடர்புடை அலுவலர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அத்திக்கடவு - அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரி நீரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதித்து குளம் குட்டைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகும். கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 32 நீர்வளத்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் என மொத்தம் 1045 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படவுள்ளது. இத்திட்டத்தின் செயலாக்க பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, பிற துறைகள் மூலம் கிளைக் குழாய்களில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்து ஜூன் 2023-ல் 750 குளம் குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டது, அதன் பின்னர் போதிய உபரி நீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இல்லாத காரணத்தினால் மீண்டும் நவம்பர் 2023-ல் தொடங்கப்பட்டு ஜனவரி 2024-ல் 1045 குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. மார்ச் 2024 முதல் உபரிநீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இல்லாத காரணத்தினால் இத்திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இயலவில்லை. மேலும், 30.07.2024 முதல் காலிங்கராயன் அணைக்கட்டில் உபரிநீர் வரத்தொடங்கி, காவேரி ஆற்றில் வெள்ள நீர் வரத்தொடங்கியதால், இத்திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்னேற்பாடாக சோதனை ஓட்டப்பணிகள் நடைபெற்றது. மேலும், பவானிசாகரில் தண்ணீர் திறந்து விட்ட பிறகு கிடைக்கும் அதிகப்படியான உபரிநீர் பெற்றவுடன் 6 நீரேற்று நிலையங்களிலும் ஒரே நேரத்தில் இயக்கும் வாய்ப்புகள் அமைந்தவுடன் உடனடியாக இத்திட்டப்பணியினை விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் இத்திட்டத்தில் தனி கவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும் இத்திட்டத்தில் சிறு, சிறு பழுதுகள் ஏதேனும் இருப்பின் அந்த பழுதுகளையும் விரைந்து முடிக்க தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.