சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்தில்ரூ.8 கோடியே 55 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை பணிகளுக்கு மேயர்தொடங்கி வைத்தார்

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண்.09,10,11,35,37,38,39,40,42,43,44 ஆகிய கோட்டங்களில் உள்ள வார்மா சிட்டி, இராஜகணபதி தெரு, கோபால் தெரு, செல்வா நகர், இராமநாதபுரம், புது தெரு எக்ஸ்டேன்ஸ், பெரிய கிணறு தெரு, குண்டு பிள்ளையார் தெரு, திருநீலகண்டர் தெரு, கோவிந்த சாமி நகர், தேசிய புனரமைப்பு காலனி ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (2024-2025) ரூ.1 கோடியே 35 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளும் கோட்டம் எண். 32,33,34,41 ஆகிய கோட்டங்களில் உள்ள அங்காளம்மன் கோவில் தெரு, சேர்மன் சடகோபன் தெரு, இராஜகணபதி தெரு, இரயில்வே லைன் - தெற்கு, மேற்கு சாலைகள் பச்சைமுத்து தெரு ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு  திட்டத்தின் கீழ்  ( 2024-2025 ) ரூ.2 கோடியே 8.50 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளும், கோட்டம் எண்.9,10,11,35,36,37,38 ஆகிய கோட்டங்களில் உள்ள இராமமூர்த்தி புதூர் கரை ரோடு, வள்ளுவர் காலனி சாலை, ஸ்ரீராம் நகர், தேசிய புனரமைப்பு காலனி, நஞ்சம்பட்டி, வ.உ.சி நகர், காந்திஜூ காலனி, செல்வா நகர், குருநாதன் காடு ஆகிய பகுதிகளில்  நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் (2024-2025 ) ரூ.1 கோடியே 81 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் கான்கீரிட் சாலை அமைக்கும் பணிகள், கோட்டம் எண்.32,33,34,35,38,39 ஆகிய கோட்டங்களில் மஜித் தெரு, குரும்பர் தெரு, சுப்பிரமணிய தெரு, தம்பி காளியம்மன் கோவில் தெரு, ஜோதி டாக்கிஸ் மேற்கு தெரு, ஆதிசெல்வன் தெரு, பண்டாரிநாதன் தெரு, வையப்புரி உடையார் தெரு, கடலூர் பிரதான சாலை , தியாகி நடேசன் தெரு, அருணகிரி தெரு, கிருஷ்ணசாமி தெரு, பெரிய கிணறு தெரு, திரு.வி.க சாலை, பஜார் தெரு, சௌந்தரைய்யர் தெரு, குமரா முத்து சாமி தெரு ஆகிய பகுதிகளில்  நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்  ( 2024-2025 ) ரூ.2 கோடியே 2 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் கான்கீரிட் சாலை அமைக்கும் பணிகள், கோட்டம் எண். 40,41,42,43,44 ஆகிய கோட்டங்களில் உள்ள குமரன் தெருக்கள், சத்தியமூர்த்தி தெருக்கள், கிருஷ்ணா நகர் தெருக்கள், இராமர் கோவில் தெரு, குறிச்சி நகர் தெருக்கள், களரம்பட்டி பிரதான சாலை, சன்னியாசிகுண்டு எக்ஸ்டேன்ஸ், கடம்பூர் முனியப்பன் கோவில் தெரு, எருமாபாளையம் பிரதான சாலை, தேசிய புனரமைப்பு காலனி  ஆகிய பகுதிகளில்  நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ( 2024-2025 ) ரூ.1 கோடியே 88.50 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் கான்கீரிட் பணிகள், கோட்டம் எண்.09,10,11,32,35,36,37,38,39,40,43 ஆகிய கோட்டங்களில் உள்ள பழைய மார்க்கெட் தெருக்கள், தேசியன் தெரு, அழகப்பன் தெரு, சவுண்டப்பன் கோவில் தெருக்கள், மாரியப்பா நகர் தெருக்கள், பெரியார் நகர் தெருக்கள், பாரதியர் தெரு, குமரன் நகர் தெருக்கள், கோபால் தெரு, சீலாவரி பிரதான சாலை, முத்துகவுண்டர் தெரு, மாணிக்கவசாக தெரு, ஒந்தாப்பிள்ளை காடு தெருக்கள் ஆகிய தெருக்களில் 15-வது மத்திய நிதி குழு மானிய நிதி 2024-2025 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 20.56 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் கான்கீரிட் சாலை அமைக்கும் பணிகளுக்கு மேயர் ஆ.இராமச்சந்திரன், தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் வேடியப்பன், செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் ஓபுளிசுந்தர், சுமதி, உதவி பொறியாளர் பாஸ்கரன், அம்மாப்பேட்டை மண்டல மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.