சேலம் மாநகராட்சி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில்,மாநகராட்சி மேயர் ஆ. இராமச்சந்திரன், ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் ஆய்வு

சேலம் மாநகராட்சி குறிஞ்சி நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில், சேலம் மாநகராட்சி மேயர் ஆ. இராமச்சந்திரன், ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் ஆய்வு செய்தனர். 
வீட்டுவசதிவாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால்களில் கழிவு நீர் தடையின்றி வெளியேற உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்கள்.  மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக்குழு மூலம் மருத்துவ பரிசோதனைகள், நோய்தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள சுகாதார துறைக்கு உத்திரவிட்டார்கள்.   
அம்மாப்பேட்டை பிரதான சாலையில் உள்ள வெள்ளைக்குட்டை ஓடை பாலத்தில் மழைநீர் அடைப்பை சரிசெய்து, தற்காலிகமாக குழாய் கல்வேர்ட் அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிடப்பட்டது.  கோட்டம் எண். 40ல் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தென்புற சுற்றுச்சுவர் சரி செய்யவும், இப்பகுதிக்கு வரும் மழைநீர் செல்ல தனி கால்வாய் அமைக்கவும் உத்திரவிடப்பட்டது.  
குமரகிரி ஏரியின் நீர் மட்டத்தை 2 அடி வரை உயர்த்தவும் மற்றும் மழைநீர் ஏரியின் உள்ளே செல்ல மணல் மூட்டைகள் அடுக்கி அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டது.    
ஆய்வின் போது உதவி ஆணையாளர் ழு.வேடியப்பன், செயற்பொறியாளர்      மு.செந்தில்குமார் மற்றும் பலர் உள்ளனர்.