மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு மண்டல பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின்கீழ் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணியை தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூர் உரக்கிடங்கு பகுதியில் உங்கள் தொகுதியில் முதல்வர் 2023-24 திட்டத்தில், மாநகராட்சி பொதுநிதியின்கீழ் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் யுடீஊ மையம் கட்டுவதற்கான கட்டுமானப் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் இன்று (09.03.2024) தொடங்கி வைத்தார்கள்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்;;கு மண்டலம் வார்டு எண்.99-க்குட்பட்ட வெள்ளலூர் உரக்கிடங்கு பகுதியில் உங்கள் தொகுதியில் முதல்வர் 2023-24 திட்டத்தில், மாநகராட்சி பொதுநிதியின்கீழ் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் யுடீஊ மையம் கட்டுமானப் பணியினை மாண்புமிகு மேயர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், ஆகியோர் தொடங்கி வைத்து, கட்டுமானப் பணியினை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
முன்னதாக, மாண்புமிகு மேயர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், ஆகியோர் தெற்கு மண்டலம் வார்டு எண்.97-க்குட்பட்ட ஈச்சனாரி ஐயப்பா நகரில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தினையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.
இந்த நிகழ்வின்போது, மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் திரு.அஸ்லாம்பாஷா, திரு.குணசேகரன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி பொறியாளர்கள் திருமதி.சரண்யா, திரு.சபரிராஜ், தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.