ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்பில் 12 புதிய டிராக்டர்கள்மாநில நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் வழங்கினார்

சேலம், சோனா தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், சேலம் மாவட்டத்தின் சார்பில் அரசு நல திட்ட உதவிகள் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இர. பிருந்தாதேவி தலைமை வகித்தார். இவ்விழாவில் சேலம் மாநகராட்சி பொது சுகாதார மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு டிரெயிலருடன் கூடிய 12 புதிய டிராக்டர்களை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு வழங்கினார்.
சேலம் மாநகராட்சி நான்கு மண்டலத்திற்கும் தலா மூன்று டிராக்டர்கள் வீதம் மொத்தம் 12 டிராக்டர்களை மாநில நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு வழங்கினார். மானிய திட்டத்தின் கீழ் இந்த 12 டிராக்டர்களும் பொது சுகாதாரம் மற்றும் திடக்கழிவு பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. டிரெயிலருடன் கூடிய ஒரு டிராக்டரின் மதிப்பு ரூ.18 இலட்சம் வீதம் மொத்தம் 12 டிராக்டர்கள் ரூ.2 கோடியே 15 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 36 நபர்களுக்கு எருமபாளையம் பகுதியில் அமைத்துள்ள குடியிருப்புகளில் குடியிருப்பதற்கான ஒதுக்கீட்டு ஆணையத்தை மாநில நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இர. பிருந்தாதேவி, சேலம் மாநகராட்சி மேயர். ஆ.இராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர். பார்த்திபன், சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. இராஜேந்திரன், சாதாசிவம் (மேட்டூர்), ஆணையாளர் சீ.பாலச்சந்தர், துணை மேயர் மா.சாரதாதேவி, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம், மண்டலக்குழுத்தலைவர் எஸ்.டி.கலையமுதன், மாநகர நல அலுவலர் / துணை இயக்குநர் மரு.ந.யோகானந் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.