10-வது ஆண்டு நிறைவு  விழாவை குறிக்கும் வகையில் 10 நாட்கள் கொண்டாட்டத்தை அறிவிக்கும் மீனாட்சி மருத்துவமனை – தஞ்சாவூர்

தஞ்சாவூர் / ஜனவரி 2023: டெல்டா மாவட்டங்களில் மிகப் பிரபலமாக இயங்கி வரும் 250 படுக்கை வசதிகள் கொண்ட மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர், 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் 10-வது ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் வகையில் இந்த ஆண்டு 10 நாட்கள் கொண்டாட்டத்தை அறிவித்திருக்கிறது.  ஜனவரி 7-ம் தேதியன்று தொடங்கும் இக்கொண்டாட்ட நிகழ்வுகள், ஜனவரி17, காணும் பொங்கல் திருநாளன்று மாலையில் மாபெரும் கண்கவர் நிகழ்வோடு நிறைவடையும்.  பன்முக சிறப்புப் பிரிவுகளை உள்ளடக்கி, சிறப்பான மருத்துவ சேவையாற்றி வரும் இம்மருத்துவமனை இக்காலகட்டத்தில் பல்வேறு அறக்கொடை செயல்பாடுகளையும் மேற்கொள்ளவிருக்கிறது. 

மீனாட்சி மருத்துவமனை தஞ்சாவூர் – ன் தலைவர் டாக்டர்குருசங்கர் இதுபற்றி கூறியதாவது: “ஒரு ஆண்டுவிழா என்பதையும் கடந்த ஒரு திருவிழா இது; இத்தகைய ஒரு வெற்றிகரமான பயணத்தை சாத்தியமாக்கியிருப்பது எமது மருத்துவமனையை சேர்ந்த அனைத்து பணியாளர்களின் 10 ஆண்டுகால மிகச்சிறப்பான பணி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வே ஆகும்.  நாங்கள் இவர்கள் அனைவரையும் கொண்டாடி, கௌரவித்து மகிழ்கிறோம். எமது முயற்சிகளில் தளராத நம்பிக்கையை வைத்து எங்களை திறனதிகாரம் பெற்றவர்களாக உருவாக்கியிருக்கும் சமுதாயத்திற்கும் எமது நன்றிக்கடனை செலுத்த நாங்கள் விரும்புகிறோம்.  நாங்கள் பெற்றதைப்போலவே, சமுதாயமும் திறனதிகாரம் பெறுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பினை இந்த கொண்டாட்ட நிகழ்வு எங்களுக்கு வழங்குகிறது.  டெல்டா பகுதியில் பிரபலமான மற்றும் பெரிதும் மதிக்கப்படுகின்ற மருத்துவ பெருநிறுவனமாக இம்மருத்துவமனையை நிலைநாட்ட உதவியிருக்கின்ற அனைவரின் முயற்சிகளுக்கும் நாங்கள் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இத்தருணத்தில் எமது நெஞ்சங்களின் ஆழத்திலிருந்து நன்றியினை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.” 

இக்கொண்டாட்டங்களின் இறுதி நாளான ஜனவரி 17 அன்று பகல் நேரத்தில் ஒரு “திருவிழா” நிகழ்வும் மற்றும் இரவு நேரத்தில் ஒரு “ஸ்டார் நைட்” நிகழ்வும் சிறப்பாக நடைபெற உள்ளன.  பகல் பொழுது முழுவதும் நீடிக்கின்ற திருவிழா கொண்டாட்டத்தில் சில தசாப்தங்களுக்கு முன்பு வரை விளையாடப்பட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் காட்சிப்படுத்தப்படும். பார்வையாளர்களை கடந்த காலத்தை நோக்கி இது அழைத்துச் செல்லும்.  அவர்களது இளம் வயதில் அனுபவத்தை அந்த அற்புதமான தருணங்களை திரும்பவும் நினைவுகூர்ந்து மகிழ்வதற்கான ஒரு வாய்ப்பாக அமையும். ஆராய்ச்சி உணர்வை ஊக்குவிப்பதற்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட ஒரு பொழுதுபோக்கு பூங்காவும் இதற்காக நிறுவப்படும்.  சின்னத்திரை பிரபலங்கள் பலர் பங்கேற்கும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் “ஸ்டார் நைட்” கொண்டாட்டத்தில் இடம்பெறுகின்றன. அன்று  முழுவதும் சிற்றுண்டிகளை வழங்கும் உணவகங்கள் அமைக்கப்படுகின்றன.  அத்துடன், கொண்டாட்ட நிகழ்வின் அமைவிடத்தில் கூடுதலாக 10 பிற ஸ்டால்களும் இடம்பெறுகின்றன.  ஜனவரி 17-ம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதி நிகழ்வின்போது 15,000-க்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கொண்டாட்ட நிகழ்விற்கு அனுமதி இலவசம்.  இதில் கலந்துகொண்டு சிறப்பிக்க அனைவரும் வரவேற்கப்படுகின்றனர். 

இக்கொண்டாட்ட நிகழ்வின்போது கீழ்க்கண்டவை உட்பட, 10 அறக்கொடை திட்டங்களையும் இம்மருத்துவமனை அறிவித்திருக்கிறது: 

•       2023 ஜனவரி 10 முதல் 20 வரை 10 நாட்களுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை பேக்கேஜ் ரூபாய் 10,000 என்ற சிறப்புக் கட்டணத்தில் கிடைக்கப்பெறும். 

•         2023 ஜனவரி 10 முதல் 20 வரை 10 நாட்களுக்கு பத்து பரிசோதனைகளின் தொகுப்பு ரூ.1000 என்ற சிறப்பு கட்டணத்தில் கிடைக்கும். 

•         2023 ஜனவரி 20 முதல் 30 வரை 10 நாட்களுக்கு வெளிநோயாளி பிரிவு சார்ந்த அனைத்து பரிசோதனைகளுக்கும் 10% தள்ளுபடி 

•         2023 ஜனவரி 14 அன்று ஒரு நாளுக்கு மட்டும் ரூ.10 என்ற கட்டணத்தில் அனைத்து வெளி நோயாளி பிரிவு மருத்துவ ஆலோசனை (அவசர சிகிச்சை  உட்பட) கிடைக்கும். 

•         2023 ஜனவரி 13 அன்று ஒரு நாளுக்கு மட்டும் ரூ.10 என்ற விலையில் மருத்துவமனையின் உணவகத்தில் மதிய உணவு வழங்கப்படும். 

•         2023 ஜனவரி 10 முதல் 20 வரை 10 நாட்களுக்கு மருத்துவமனையிலிருந்து 10 கி.மீ. தூரம் வரை உள்ள இடங்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் பிக்அப் மற்றும் டிராப் வசதி வழங்கப்படும். 

•         2023 ஜனவரி 13 அன்று பிறக்கும் அனைத்துக் பச்சிளம் குழந்தைகளுக்கும் 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும். 

•         2023 ஜனவரி 10 முதல் 20 வரை 10 நாட்களுக்கு குழந்தைகளுக்கு OPD பிரிவில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். 

•         2023 ஜனவரி 10-ம் தேதி – ஒரு நாள் மட்டும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் உள்நோயாளிகளுக்கான  கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும். 

         அடுத்த 10 மாதங்களில் பொதுமக்களில் 10000 நபர்களுக்கு அடிப்படை உயிர்காப்பு சிகிச்சை பயிற்சி அளிக்கப்படும். 

இது தொடர்பாக டாக்டர்எஸ்குருசங்கர் மேலும் கூறியதாவது“பத்து ஆண்டுகளுக்கு முன்பு அனைவருக்கும் கிடைக்க கூடிய கட்டணத்தில் அவசரநிலை நேர்வுகளுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைக்கான அவசியம் இருந்தது. இதுவே 2013-ம் ஆண்டில் தஞ்சாவூரில் இம்மருத்துவமனையை நாங்கள் நிறுவ காரணமாக இருந்தது . அதைத்தொடர்ந்து, விடாமுயற்சியாலும், மருத்துவ சேவைகளில்  தளராத அர்ப்பணிப்பு உணர்வோடும்செயல்பட்டு, இம்மருத்துவமனையை உயர்நிலைக்கு நாங்கள் எடுத்துச் சென்றிருக்கிறோம்.  இதன்மூலம் தஞ்சாவூரில் பெருநகரங்களுக்கு நிகரான முதன்மையான மருத்துவ சிகிச்சை வசதி  கிடைக்குமாறு செய்ய வேண்டுமென்ற நோக்கத்தை நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறோம்.  உலகெங்கிலுமிருந்து பல நோயாளிகள்  இம்மருத்துவமனையை தேடி இங்கு வருவதால், உலகளாவிய சுகாதார வசதிகளிலும்  டெல்டா பகுதி இடம்பெறுவதற்கு இது வழிவகுத்திருக்கிறது.”

இதய சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு மருத்துவமனையாக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட மீனாட்சி ஹார்ட் கிளினிக், இதயபிரச்சனைகளை அடையாளம் கண்டு சிறந்த சிகிச்சையளிப்பதற்காக 2012-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, உயிர்காப்பு சிகிச்சைக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் பிற வசதிகளுடன் பன்முக சிறப்புப் பிரிவுகள் கொண்ட ஒரு மருத்துவமனையாக மீனாட்சி மருத்துவனை வளர்ச்சி கண்டது.  தமிழ்நாடு மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் டாக்டர்ஜெஜெயலலிதா அவர்கள் 2013மே 6 அன்று அதிகாரப்பூர்வமாக மீனாட்சி மருத்துவனையை தொடங்கி வைத்தார்.   இம்மருத்துவமனை முதலில் 50 படுக்கை வசதிகள் கொண்டதாக இருந்தது. மிக நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சாதனங்களோடு இப்போது, இம்மருத்துவமனை 250 படுக்கை வசதிகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனையாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *