குளோபல் இன்டர்நேஷ்னல் பொதுநல அறக்கட்டளையின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது

சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் குளோபல் இன்டர்நேஷ்னல் பொதுநல அறக்கட்டளையின் என்னும் அறக்கட்டளையின் துவக்க விழா நடைபெற்றது. GSS க்ரூப் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஒன்றிணைந்து இந்த அறக்கட்டளையை துவக்கி உள்ளனர்.

துவக்க விழா நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் தலைவர் செந்தமிழ் செல்வி, செயலாளர் கோகுல்நாத், பொருளாளர் ராஜ்குமார், அறங்காவலர் யுவராஜ் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் குளோபல் இன்டர்நேஷ்னல் பப்ளிக் டிரஸ்ட் அறக்கட்டளையின் பெயர் பலகையை திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அறக்கட்டளையின் தலைவர் செந்தமிழ் செல்வி,

தங்களது அறக்கட்டளையின் மூலம், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பணிக்கு செல்லும் சிறுவர்களை மீட்டு அவர்களுக்கு கல்வியை தொடர வழிவகை செய்வது, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பது, சமூகத்தில் தனித்து விடப்பட்ட முதியோர்களை பேணிக்காப்பது உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தங்களது அறக்கட்டளையின் மூலம் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலில் திருச்சி மாவட்டத்தில் இருந்து துவங்க இருக்கும் தங்களது நலத்திட்ட பணிகள், விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும், இதற்காக தனிநபர்களும், அரசாங்கமும் தங்களால் முயன்ற உதவிகளை செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக இந்நிறுவனத்தின் சார்பாக தமிழ் புத்தாண்டு தினத்தன்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.