இந்தியாவில் முதன்மை டயர் தயாரிப்பாளர் எனபுகழ்பெற்றிருக்கும் எம்ஆர்எஃப், மும்பையின் வோர்லிபகுதியில் பூனம் சேம்பர்ஸ் என்ற இடத்தில் தி எம்ஆர்எஃப்டையர்டிரோம் என்ற பெயரில் அதன் மிகப்பெரிய ஷோரூம்மற்றும் வாடிக்கையாளர் சேவை மையத்தின் மாபெரும்திறப்புவிழாவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. வாகனங்களுக்கான வீல் (சக்கரம்) பராமரிப்பில் மிகச்சிறந்தசேவைகளை வழங்குவதற்கு தேவைப்படுகின்ற மிகநேர்த்தியான, துல்லியமான சாதனங்கள் நிறுவப்பட்டிருக்கும்இந்த டயர்டிரோம் – ல் எம்ஆர்எஃப் – ஆல்பயிற்சியளிக்கப்பட்ட பொறியாளர்களும் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமின்றி, பராமரிப்பு சுவைகளின் நிபுணத்துவவழிகாட்டலையும் டயர்டிரோம் தனதுவாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இச்சேவைகள்அனைத்தும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்ற சௌகரியமானசூழலில் வழங்கப்படுவது இச்சேவை மையத்தின் சிறப்பைமேலும் உயர்த்துகிறது. டயர்குரோம் – ல் வழங்கப்படும் சேவைகளுள், ரோபோட்டிக்வீல் அலைன்மெண்ட், குறைபாடுகளை கண்டறிவதற்கானவீல் பேலன்சிங் வாகனப் பாதுகாப்பு பரிசோதனை லேன், எலக்ட்ரானிக் ஹெட்லைட் அலைன்மெண்ட், ஏ/சி ரக்கவரிங்மற்றும் ரீசார்ஜிங், தனிச்சிறப்பு வய்ந்த இருசக்கரவாகனங்களுக்கான டயர் சேவைகள் மற்றும் டியூப்லெஸ்டயர் பழுதுநீக்கல்கள் ஆகியவை உள்ளடங்கும். தங்களதுவாகனத்தின் டயர்களை மாற்றி புதிய டயர்களைவாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு எம்ஆர்எஃப் டயர்களின்விரிவான அணிவரிசையும் இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது. டயர்டிரோம் திறப்புவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றஎம்ஆர்எஃப் லிமிடெட் – ன் தலைவர் மற்றும் நிர்வாகஇயக்குனர் திரு, கே.எம். மாமென் கூறியதாவது: ஆசியாவின் மிக நேர்த்தியான டயர் மற்றும் வீல் பராமரிப்புசேவைகளை மும்பை மாநகருக்கு வழங்க வேண்டும் என்றஎண்ணத்தோடு, இங்கு டயர்டிரோம் – ஐ தொடங்குவதில்நாங்கள் அளவிலா உற்சாகம் கொண்டிருக்கிறோம். 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக பிற நகரங்களில் எமதுடயர்டிரோம்களில் நிகரற்ற இனிய அனுபவத்தைவழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களை நாங்கள்பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறோம். இப்போதுமும்பையிலுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கும் அதேஅளவிலான சேவையையும், திருப்தியையும் இந்த புதியடயர்டிரோம் வழியாக வழங்குவதை நாங்கள் ஆவலோடுஎதிர்நோக்குகிறோம்.”
Rela Hospital Opens 24/7 Cath Lab for Acute Stroke Interventions
Chennai, October 28, 2024: Rela Hospital has established an advanced 24/7 cath lab for acute stroke interventions to support a range of neurovascular and interventional…