சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தலித் மனித உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மாநிலத் தலைவர் எம்.மதன்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மதியழகன் கடந்த 2017ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கலாபுரம் கொத்தபேட்டாகிராமத்தில் 124 ஏக்கர் கனிமவளம் நிறைந்த மலை குன்றுகளை தனது குடும்பத்தின் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டபோது இந்த சொத்து கணக்கை காட்டாமல் மறைத்துவிட்டதாகவும் கனிம வளம் நிறைந்த இந்த சொத்து பல கோடி ரூபாய் மதிப்புடையது என்றும் இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லை என்றும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும்அவர்களும் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாக கூறினார்.
பதவியை பயன்படுத்தி கனிமவள இடங்களை முறைகேடாக பயன்படுத்தி வாங்கிய சொத்துக்களை மறைத்து கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு மதியழகன் என்பவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக ரத்து செய்ய வேண்டியும் அவர் மீது C.B.I நடவடிக்கை எடுக்க வேண்டியும் உரிய ஆதாரங்களை இன்று நடைபெற்ற பத்திரிக்கை மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில்
ஏப்ரல் 14 இயக்க நிறுவனர் தேசிய தலைவர் தீவுத்திடல் சசிகுமார்,
குடிசை மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் சேவாரத்ணா ராஜேந்திரன்,
வழக்கறிஞர் ஏப்ரல் 14 இயக்கம் மாநில இளைஞரணி தலைவர் அம்பேத்கர் பிரசாந்த்,
ஏப்ரல் 14 இயக்கம் சிறுபான்மையினர் நல பிரிவு மாநில தலைவர் இக்பால்,
ஏப்ரல் 14 இயக்கம் வடசென்னை மாவட்ட தலைவர் பிரகாஷ்,
ஏப்ரல் 14 இயக்கம் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் சீனிவாசன்,
மற்றும் ஏப்ரல் 14 இயக்க மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
