முத்து மருத்துவமனை வட சென்னையின் புளியந்தோப்பு பகுதியில் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி தொடங்கப்பட்டு.
கடந்த 12 வருடங்களாக இயங்கி வருகிறது . இங்கு, உலகத்தரம் வாய்ந்த தீவிர சிகிச்சை பிரிவு (ICU), அறுவை சிகிச்சை அரங்கம் (OPERATION THEATRE) உள்ளிட்ட பிரிவுகள் சிறந்த மருத்துவர்களால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வட சென்னையில் முதன்முறையாக எக்மோ (ECMO) முத்து மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கோவிட் காலத்தில் சிறப்பாக செயல்பட்டு அனைத்து நோயாளிகளுக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு 99% இறப்பு விகிதம் இன்றி குணம் பெற்று சென்றனர்.
100 % oxigen இருப்பில் வைத்து சிறப்பாக செயல்பட்டது. மேலும் பல உயர்தர அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன.
தற்பொழுது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சான்றிதழ் பெற்று திரு. அப்துல் மதீன் 33 வயதுடைய இளைஞருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இவருக்கு
1.சிறுநீரக செயல் இழப்பு
2.ரத்த கொதிப்பு
3.இடது நுரையீரல் செயல் இழப்பு
4.வலது இருதய செயலிழப்பு
இவ்வாறாக பல நோய்கள் இருந்ததால் ,பல கார்ப்பரேட் மருத்துவமனைகளால் கைவிட்ட நிலையில் முத்து மருத்துவமனையில் மருத்துவர்கள் துணிவுடன் நம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்து முடித்தார்கள்.
முத்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர். மருத்துவர் திரு. சொக்கலிங்கம், சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை மருத்துவர்
திரு. K. முத்துரத்தினம், சிறுநீரகவியல் மருத்துவர்
திரு. R. P. செந்தில் குமார், மற்றும் மயக்க மருந்து நிபுணர்
திரு. பிரவீன் நாத் ஆகியோரின் மருத்துவக் குழு தலைமையில் சிறுநீரக மாற்று அறுவை வெற்றிகரமாக செய்து முடித்து தற்போது மருத்துவமனையிலிருந்து Discharge செய்து வீட்டிற்கு செல்ல இருக்கிறார்.