சென்னை அகமுடையார் கல்வி அற கட்டளை மற்றும் அகமுடையார் திருமண தகவல் மையம் இணைந்து நடத்தும்
அகமுடையார் சமுதாய மக்களுக்கான வரன் அறிமுக விழா மற்றும் பெற்றோர் சந்திப்பு ஜாதகம் பதிவு விழா
சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர் மாளிகையில் அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளை தலைவர் சுப. அன்பழகன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது
இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக வாக்ஸ் குரூப் ஆஃப் கம்பெனியின் சேர்மன் இராவணன் ஞானசுந்தரம் கலந்து கொண்டு
குத்துவிளக்கேற்றி மாமன்னர்களின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தி தொடங்கி வைத்தார்
இந்த திருமண தகவல் மையத்தில் 300-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மணமகளையும் மணமகன்களையும் தேர்ந்தெடுக்க 300 ரூபாய் செலுத்தி பதிவு செய்தனர் பதிவு செய்த அனைவரையும் எல் இ டி திரையில் அவர்களின் படிப்பு சம்பளம் ஆகியவைகளை காண்பித்து பிடித்திருந்தால் நேரடியாகவே இரு வீட்டார்களையும் பேசவைத்து
விடுகிறார்கள் இந்த திருமண தகவல் மையத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் 300 ரூபாய் வரன் பதிவு சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், கே கணேசன்.
வி. அன்புச் செல்வன் டாக்டர் டி. செந்தமிழ் பாரி இராவணன் ஞானசுந்தரம் எஸ் ராமச்சந்திரன். சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்
ஜி சரவணகுமார் ஆர் சுந்தர வதனம் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் பேசிய வாக்ஸ் குருப் ஆப் கம்பெனியின் சேர்மன் இராவணன் ஞானசுந்தரம் அகமுடையார் சமுதாயத்தில் நலிந்தவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் கல்விலும் வேலைவாய்ப்பிலும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் அகமுடையார் சமுதாயத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வைத்துள்ளவர்கள் இலவசமாக பல்வேறு விதமான நோய்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முன்வர வேண்டும் பொறியியல் கல்லூரிகள் வைத்துள்ளவர்களும் அகமுடைய சமுதாயத்தில் நலிந்தவர்களாக இருப்பவர்களுக்கு இலவச கல்வியும் , பல்வேறு தொழிற்சாலைகளை வைத்துள்ளவர்கள் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
மேலும் கூறிய அவர் வரன் பதிவிற்கு 72005 07629 / 94455 05061 என்ற whatsapp எண்ணிலும் agamudayarmatri.com. என்ற website
மேட்ரி அப்ளிகேஷன் என்ற மொபைல் ஆப் மூலமும் வரன்களை பார்க்கலாம் என்றார்