பாலிகேப் அறிமுகப்படுத்தும் புதிய விளம்பர வீடியோ 

கோவை : ஒரு முன்னணி எலக்ட்ரிக்கல் பொருட்கள் நிறுவனமான பாலிகேப் இந்தியா, எக்ஸ்ட்ரா சேஃப் பாலிகேப் மாக்சிமா+ க்கான பாலிகாப்மேக்ஸிமா+ க்ரீன் வயர்  ஐ காட்சிப்படுத்துகின்ற  தெற்கு சந்தைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட அதன் சமீபத்திய தொலைகாட்சி விளம்பரத்தை (TVC)  அறிமுகம் செய்வதை பெருமையுடன் அறிவித்தது. இந்த பிரச்சாரத்தின் மூலம், பாலிகேப், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பிற்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. நுகர்வோர் தங்கள் வீடுகளின் பாதுகாப்பிற்காக முன்னுரிமை கொடுக்கவும் மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க ஊக்குவிக்கிறது. இந்த TVC  வீட்டுக் கட்டுமானத்தில் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, ஒருவரின் கனவு இல்லத்திற்கு சரியான வயரிங் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வழக்கமான நடைமுறைகளை நவீன பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இணைக்கிறது .

இந்த பிரச்சாரத்தைப் பற்றிப் பேசுகையில், பாலிகேப் இந்தியா வின் நிர்வாகத் தலைவரும், தலைமை வணிக அதிகாரியுமான இஷ்விந்தர் சிங் குரானா, “மின்சார தீர்வுகளில் ஒரு முன்னணியாளராக  இருக்கும் பாலிகேப் நிறுவனம், புதுமைகளை வளர்ப்பதற்கும், எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் உறுதிபூண்டுள்ளது. பாலிகாப்மாக்சிமா+ கிரீன் வயர் க்கான எங்கள் சமீபத்திய பிரச்சாரத்தின் மூலம், நுகர்வோர் தங்கள் வீடுகளுக்கு புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதற்கு அதிகாரம் அளிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.